Tuesday, April 5, 2011

பொன்னர், சங்கர் கோவிலில்படுகள விழா கோலாகலம்


பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011,01:22 IST

மணப்பாறை: மணப்பாறை அருகே படுகளத்தில் உள்ள பொன்னர், சங்கர் கோவிலில் நேற்று இரவு படுகள விழா வெகு சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர், பெரியக்காண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள கோவில்களின் மாசித்திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை போர்புரிந்து எதிரியின் சூழ்ச்சியால் இறந்த இடமான படுகளத்தில் வரலாற்று நிகழ்வுகளை ஞாபகத்திற்கு கொண்டு வரும் வகையில் நடக்கும் விழா நிகழ்ச்சிகளான படுகளம் சாய்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, அம்மன் பள்ளக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, அதன்பின் பூப்பெய்யாத இளம்பெண்ணுக்கு அருள் வந்து புனிதசாமி தீர்த்தத்தை தெளித்து படுகளம் சாய்ந்து இறந்த நிலை போல படுத்துக்கிடக்கும் பக்தர்களை எழுப்பும் நிகழ்ச்சியும் நேற்று இரவு படுகளத்தில் நடந்தது. விழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வீரப்பூரில் திரண்டனர். விழாவில் எட்டாம் நாள் முக்கிய விழாவான வேடபரி எனும் குதிரைத்தேர் விழா இன்று மாலை ஐந்து மணிக்கு வீரப்பூரில் நடக்கிறது.

No comments:

Post a Comment