Wednesday, April 6, 2011

வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயிலில் இன்று படுகளம்

First Published : 10 Mar 2011 08:21:04 AM IST

மணப்பாறை, மார்ச் 9: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை படுகளம் நடைபெறுகிறது.

 பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா சிவராத்திரி மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து புதன்கிழமை பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நடைபெற்றது.
 பொன்னர் - சங்கருடன் பிறந்த அருக்கானித் தங்காள், புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா நடைபெற்றது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் திரண்டனர்.
 எதிரிப் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வை போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் வியாழக்கிழமை (மார்ச் 10) நடைபெறுகிறது.
 திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து அணியாப்பூரில் அம்பு போடும் வேடபரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பார்வையிடுவார்கள். இதைத் தொடர்ந்து, தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடைபெறும்.
 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறும்.
 திருவிழாவை முன்னிட்டு, மணப்பாறையிலிருந்து - நெல்லி வளநாடு, வீரப்பூர், தொப்பம்பட்டி படுகள மேடு பகுதிக்கு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Source :http://tamil.allnews.in/news/markets/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/284550.html


வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயிலில் வேடபரித் திருவிழா


First Published : 12 Mar 2011 12:39:22 PM IST

மணப்பாறை, மார்ச் 11:   திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் அருள்மிகு பொன்னர் - சங்கர் கோயிலில் வெள்ளிக்கிழமை வேடபரித் திருவிழா நடந்தது.

    பொன்னர் - சங்கர் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வேடபரியை முன்னிட்டு அருள்மிகு பெரியக்காண்டியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலில் இருந்து சாம்புவன் காளையில் பறை ஒலி எழுப்பியவாறு ஒருவர் முன்னே செல்ல குதிரை வாகனத்தில் பொன்னர் அம்பு போட புறப்பட்டார்.
  பொன்னருக்குப் பின்னால் யானை வாகனத்தில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளினார்.  
    வீரப்பூரிலிருந்து அணியாப்பூர் வரை குதிரை வாகனத்தில் சென்று பொன்னர் அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் இரவு முழுவதும் தங்கும் பெரியக்காண்டியம்மன், பொன்னர் உள்ளிட்ட தெய்வத் திருமேனிகள் அதிகாலை வீரப்பூர் ஆலயத்திற்கு வந்து சேரும்.
   இந்த வேடபரித் திருவிழாவைக் காண வீரப்பூரிலிருந்து அணியாப்பூர் வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று இறைவனை வழிபட்டனர்.
காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீஸôர் பாதுகப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வீரப்பூரில் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகின்றது.

நன்றி: தினமணி - http://tamil.allnews.in/news/world/-------/285995.html 

Tuesday, April 5, 2011

பொன்னர், சங்கர் கோவிலில்படுகள விழா கோலாகலம்


பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011,01:22 IST

மணப்பாறை: மணப்பாறை அருகே படுகளத்தில் உள்ள பொன்னர், சங்கர் கோவிலில் நேற்று இரவு படுகள விழா வெகு சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர், பெரியக்காண்டியம்மன், பொன்னர், சங்கர், தங்காள கோவில்களின் மாசித்திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை போர்புரிந்து எதிரியின் சூழ்ச்சியால் இறந்த இடமான படுகளத்தில் வரலாற்று நிகழ்வுகளை ஞாபகத்திற்கு கொண்டு வரும் வகையில் நடக்கும் விழா நிகழ்ச்சிகளான படுகளம் சாய்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, அம்மன் பள்ளக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, அதன்பின் பூப்பெய்யாத இளம்பெண்ணுக்கு அருள் வந்து புனிதசாமி தீர்த்தத்தை தெளித்து படுகளம் சாய்ந்து இறந்த நிலை போல படுத்துக்கிடக்கும் பக்தர்களை எழுப்பும் நிகழ்ச்சியும் நேற்று இரவு படுகளத்தில் நடந்தது. விழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வீரப்பூரில் திரண்டனர். விழாவில் எட்டாம் நாள் முக்கிய விழாவான வேடபரி எனும் குதிரைத்தேர் விழா இன்று மாலை ஐந்து மணிக்கு வீரப்பூரில் நடக்கிறது.

பொன்னர் சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்

தினமலரில் பதிவு செய்த நாள் : ஜூலை 14,2010,02:58 IST


ப.வேலூர்: ப.வேலூர் பொன்னர், சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் 11 ஆயிரம் ரூபாயக்கு ஏலம் போனது. ப.வேலூர் அருகே படமுடிபாளையத்தில் ஆண்டுதோறும் பொன்னர் சங்கர், தங்காயி நாடகம் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு பொன்னர் சங்கர் வாழ்கை வரலாறு நாடகம் நடந்தது.

கடந்த 2ம் தேதியுடன் நாடகம் முடிந்தது. அன்றிரவு படுகளம்  நிகழ்ச்சி நடந்தது. அதை முன்னிட்டு, அப்பகுதி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.அப்போது, வழிப்பாட்டில் வைத்த மூன்று எலும்மிச்சை பழம், நேற்றிரவு பொன்னர் சங்கர் தங்காயி கோவில் சன்னதியில் ஏலம் விடப்பட்டது. 10 ரூபாயில் துவங்கிய ஏலத்தில், ஒரு பழம் 5, 501 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மற்றொரு பழம் 4,001 ரூபாய்க்கும், மூன்றாவது பழம் 2,001 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்தப் பழத்தை வீட்டில் வைத்தால் தொழில், குடும்ப விருத்தி ஏற்படும் என நம்பப்படுகிறது.இந்த ஏலத்தில் படமுடிபாளையத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.