தினமலரில் பதிவு செய்த நாள் : ஜூலை 14,2010,02:58 IST
ப.வேலூர்: ப.வேலூர் பொன்னர், சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் 11 ஆயிரம் ரூபாயக்கு ஏலம் போனது. ப.வேலூர் அருகே படமுடிபாளையத்தில் ஆண்டுதோறும் பொன்னர் சங்கர், தங்காயி நாடகம் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு பொன்னர் சங்கர் வாழ்கை வரலாறு நாடகம் நடந்தது.
கடந்த 2ம் தேதியுடன் நாடகம் முடிந்தது. அன்றிரவு படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அதை முன்னிட்டு, அப்பகுதி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.அப்போது, வழிப்பாட்டில் வைத்த மூன்று எலும்மிச்சை பழம், நேற்றிரவு பொன்னர் சங்கர் தங்காயி கோவில் சன்னதியில் ஏலம் விடப்பட்டது. 10 ரூபாயில் துவங்கிய ஏலத்தில், ஒரு பழம் 5, 501 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மற்றொரு பழம் 4,001 ரூபாய்க்கும், மூன்றாவது பழம் 2,001 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்தப் பழத்தை வீட்டில் வைத்தால் தொழில், குடும்ப விருத்தி ஏற்படும் என நம்பப்படுகிறது.இந்த ஏலத்தில் படமுடிபாளையத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
Source:Dinamalar http://www.dinamalar.com/News_Detail.asp?Id=39352
No comments:
Post a Comment