Wednesday, April 6, 2011

வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயிலில் வேடபரித் திருவிழா


First Published : 12 Mar 2011 12:39:22 PM IST

மணப்பாறை, மார்ச் 11:   திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் அருள்மிகு பொன்னர் - சங்கர் கோயிலில் வெள்ளிக்கிழமை வேடபரித் திருவிழா நடந்தது.

    பொன்னர் - சங்கர் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வேடபரியை முன்னிட்டு அருள்மிகு பெரியக்காண்டியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலில் இருந்து சாம்புவன் காளையில் பறை ஒலி எழுப்பியவாறு ஒருவர் முன்னே செல்ல குதிரை வாகனத்தில் பொன்னர் அம்பு போட புறப்பட்டார்.
  பொன்னருக்குப் பின்னால் யானை வாகனத்தில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளினார்.  
    வீரப்பூரிலிருந்து அணியாப்பூர் வரை குதிரை வாகனத்தில் சென்று பொன்னர் அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் இரவு முழுவதும் தங்கும் பெரியக்காண்டியம்மன், பொன்னர் உள்ளிட்ட தெய்வத் திருமேனிகள் அதிகாலை வீரப்பூர் ஆலயத்திற்கு வந்து சேரும்.
   இந்த வேடபரித் திருவிழாவைக் காண வீரப்பூரிலிருந்து அணியாப்பூர் வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று இறைவனை வழிபட்டனர்.
காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீஸôர் பாதுகப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வீரப்பூரில் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகின்றது.

நன்றி: தினமணி - http://tamil.allnews.in/news/world/-------/285995.html 

No comments:

Post a Comment